
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர்தான் ஷிவாங்கி. அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கினார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விட இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. இதன் மூலமாக படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். சிவகார்த்திகேயனின் டான் படத்தில் பிரியங்கா மோகன் தோழியாக நடித்திருந்தார். மேலும் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் அறிமுகமானார்.
இந்த நிலையில் முதன்முறையாக தன்னுடைய காதல் தோல்வி குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசினார். அதில்,” இதற்கு முன்பாக ரிலேஷன்ஷிப்பில் இருந்தீர்களா? என்று கேள்வி கேட்க, அதற்கு ஆம் இருந்தேன். ஆனால் இப்போது எனக்கு பிரேக்கப் ஆகிவிட்டது. அது மிகவும் கடினமாக இருந்தது. அந்த ஹாட் பிரேக் எனக்கு வலிமை கொடுத்துள்ளது. அதன் பிறகு என்னை நானே பார்த்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன். அழகான பசங்க ஊர் முழுக்க இருக்காங்க. நமக்கு அவர்களை பிடிக்கும் ஆனால் அவர்களுக்கு நம்மை பிடிக்கணும் என்ற அவசியம் இல்லை” என்று கூறியுள்ளார்.