பராகுவேவை சேர்ந்த நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்சோ. இவருக்கு 20 வயது ஆகும் நிலையில் தற்போது பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டார். இவருடைய அழகு சகவீரர்களின் கவனத்தை சிதறடிப்பதாக கூறி புகார் எழுந்ததால் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார். அதாவது இவர் நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட நிலையில் அரை இறுதியில் தோல்வியை தழுவினார்.

இருப்பினும் சக வீரர்களை ஊக்குவிப்பதற்காக அவர் பாரிஸ் கிராமத்தில் தங்கினார். ஆனால் அவர் அணியும் ஆடை விதமும், பிறருடன் பழகும் விதமும் கவன சிதறலை ஏற்படுத்துவதாக சக வீரர் ஒருவர் பராகுவே ‌ ஒலிம்பிக் கமிட்டியிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இதனை லுவானா மறுத்துள்ளார். அதோடு மிகவும் வேதனையுடன் 20 வயதிலேயே நீச்சல் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். மேலும் இவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது.