
தென்னிந்திய சினிமாவில் பாடலாசிரியர், கவிஞர், நடிகர் அரசியல்வாதி என்று பன்முக திறமை கொண்டவர்தான் சினேகன். இவர் ஆரிராரோ, ஞாபகம் வருதே, பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை என ரசிகர்களை கவர்ந்த 2500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானார். 2021 ஆம் வருடம் நடந்த சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்தார் .
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் வருடம் கன்னிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பெற்றோர் சம்மதத்தோடு முடிந்தது. திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கன்னிகா கர்ப்பமாகி இரட்டை குழந்தைகளையும் பெற்றுள்ளார். குழந்தைகளுக்கு கமலஹாசன் பெயர் வைத்துள்ளார் . இதை சினேகன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உள்ளார்.
கமலஹாசன் சினேகனின் குழந்தைகளுக்கு தங்க வயல்களை அணிவித்துள்ளார். மேலும் சினேகன் குழந்தைகளுக்கு “காதல்” கன்னிகா சினேகன்..” கவிதை” கன்னிகா சினேகன் என்று பெயர் வைத்துள்ளார். இதை பார்த்த இணையவாசிகள் நயன்தாரா பாணியில் பெயர் வைக்கப்பட்டுள்ளதா? என்று கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.