வடமாநிலத்தை சேர்ந்த சிலர் ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலமாக அழகான இளம் பெண்களின் புகைப்படங்களை வைத்து தொழிலதிபர்களுக்குவடமாநிலத்தை சேர்ந்த சிலர் ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலமாக அழகான இளம் பெண்களின் புகைப்படங்களை வைத்து தொழிலதிபர்களுக்கு வலை வீசி உள்ளனர். இந்த வலையில் வசமாக சிக்கிய தொழிலதிபர்களை ஹைதராபாத் மற்றும் மதாப்பூரில் உள்ள பப்பிற்கு வரவழைத்த அந்த மோசடி கும்பல் இளம் பெண்கள் மூலமாக விருந்தளித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் வீடியோவாக எடுத்து வைத்துள்ளது. அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டி தொழிலதிபர்களிடம் பணம் பறித்துள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து பத்து பேர் கொண்ட மோசடி கும்பலில் 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.