
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. குறிப்பாக குழந்தைகளின் வீடியோ என்றால் மிகவும் ரசிக்க வைக்கும் விதமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது ஒன்றரை வயது குழந்தை தற்போது நடக்க பழகிக் கொண்ட நிலையில் வீட்டில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது.
அந்த குழந்தையுடன் ஒரு நாய் குட்டி கண்ணாமூச்சி விளையாடியது. அதாவது அந்த நாய் லேசாக சத்தம் எழுப்பியப்படியே குழந்தையை விளையாட அழைத்த நிலையில் குழந்தையும் நாய் குட்டியுடன் சேர்ந்து அழகாக விளையாடுகிறது. மேலும் அந்த நாய் குட்டியும் குழந்தையும் அழகாக விளையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.
View this post on Instagram