உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த‌ பாஜக பெண் எம்எல்ஏ கேட்டகீ சிங். இவர் இந்துக்களை பாதுகாக்க மருத்துவமனைகளில் முஸ்லிம்களுக்கு தனி வார்டு ஒதுக்க வேண்டும் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, முஸ்லிம்கள் வருடத்தின் 54 வெள்ளிக்கிழமைகளில் தொழுகை செய்யும் நிலையில் ஹோலி பண்டிகை வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் தான் வருகிறது. இதனை போலிஸ் அதிகாரி ஒருவர் தெளிவாக கூறிய நிலையில் அந்த நாளில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த அழுகை கும்பல் தெருவில் இறங்குவார்கள் என்று முஸ்லிம்களை குறிப்பிட்டார்.

அதன் பிறகு நம் மக்களை பார்த்து அதாவது இந்துக்களை பார்த்து அவர்களுக்கு இவ்வளவு பயம் இருந்தால் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு மருத்துவக் கல்லூரியில் முஸ்லிம்களுக்கு என்று அதில் ஒரு பிரிவை ஒதுக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு தனியாக மருத்துவ வார்டு ஒதுக்கும் போது இந்துக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளில் எச்சில் துப்புவது சிறுநீர் கழித்தல் போன்ற சம்பவங்களில் முஸ்லிம்கள் ஈடுபடுவது போன்ற வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனவே அவர்களுக்கு சிகிச்சை வழங்க தனியாகத்தான் வார்டு அமைக்க வேண்டும்.

மேலும் அவர்களுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சிகிச்சை வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் தான் கோரிக்கை வைத்துக் கொள்வதாக கூறினார். முன்னதாக முஸ்லிம்கள் ஹோலி பண்டிகையின் போது வெள்ளிக்கிழமை தொழுகை செய்ய மசூதிகளுக்கு போக வேண்டாம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறிய நிலையில் அதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆதரவு கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்