
திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் கோவை வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக வெற்றிக்கழக தலைவர் தம்பி விஜய்க்கு ஜான் ஆரோக்கியசாமி என்பவர் வியூக ஒருங்கிணைப்பாளராக இருக்கின்றார். ஆதவ் அர்ஜுனா என்ற வியூக பொறுப்பாளர் இருக்கின்றார். இவர்களுக்கு இந்த மண்ணின் சிக்கல்கள் நன்றாக தெரியும். பீகாரில் இருந்து ஒருத்தர் வரவேண்டும் என்றால் உங்களுக்கெல்லாம் மூளை இருக்கிறதா இல்லையா? தமிழகத்தில் யாருக்கும் மூளை எதுவும் இல்லை என்று நினைக்க மாட்டார்களா? இன்று சீமான் கேள்வி எழுப்பினார்.
திருப்பரங்குன்றம் பிரச்சனை, அத்திக்கடவு அவிநாசி பிரச்சனை மற்றும் நொய்யல் பிரச்சனை இது எல்லாம் பிரசாந்த் கிஷோருக்கு தெரியுமா? கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இருக்கும் வரை வியூக வகுப்பாளர்களுக்கு தேவை இருந்ததா? சுனில் மற்றும் பிரசாந்த் கிஷோர் போன்றவர்கள் வெளியில் இருந்து வந்து தான் வேலை பார்க்க வேண்டுமா? தமிழகத்தில் இருப்பவர்களுக்கு மூளை மங்கி விட்டதாக நினைப்பார்கள். இதை தன்மான இழப்பாக நான் பார்க்கின்றேன். ஜான் ஆரோக்கியசாமி மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரே விஜய்க்கு போதுமானவர்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.