திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாளையங்கோட்டையில் காந்தி, நேரு, அம்பேத்கர் மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் என்ற தலைப்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுக்கின்றது. மத்திய அரசு தமிழகத்தை பழிவாங்குகின்றது.

வடமாநிலங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழகத்தில் இந்தியா கூட்டணியை பிரிக்க முடியாது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான கூட்டணியில் நாம் இருக்கின்றோம். வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி பெருவாரியாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். நம் கூட்டணி எஃகு கூட்டணி. அதில் குழப்பங்களை விளைவிக்க சிலர் முயல்கின்றனர். அவர்களுடைய பாட்ஷா எல்லாம் இங்கு பலிக்காது. மக்கள் நம் பக்கம் இருப்பதால் நாம் தான் தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம் என்று செல்வப் பெருந்தகை பேசி உள்ளார்.