
திமுகவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடுவதற்காக அண்ணா அறிவாலயம் சென்று இருந்தார். அப்போது அவருக்கு சர்க்கரையின் அளவு குறைந்து திடீரென மயக்கம் வந்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் அவருடைய உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் மருத்துவமனை தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.