
பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் சார்பாக பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையில் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகையானது அவர்கள் பெரும் ஊதியத்தை பொறுத்து இருக்கும். இந்த தொகை பணிக்காலம் நிறைவடைந்த பிறகு மொத்தமாக நமக்கு திரும்ப கிடைக்கும். அதாவது திருமணம். மேற்படிப்பு, வீடு வாங்குதல் அல்லது வீடு கட்டுதல் மருத்துவ பிரச்சினைகள் போன்ற முக்கிய வாழ்க்கை நிகழ்வுகளுக்கு மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கிறது. இருப்பினும் இந்த நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக அதற்கான தகுதி வரம்புகள் மற்றும் PF சேமிப்பில் ஏற்படக்கூடிய தாக்கத்தை புரிந்து கொள்வது முக்கியம்.
திருமண மற்றும் கல்விக்காக பணம் எடுத்தால் வாழ்நாளில் மூன்று முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. வீடு வாங்க அல்லது கட்டுவதற்கு பிஎஃப் பணத்தை எடுக்க விரும்பினால் வீடு அல்லது நிலம் உங்கள் பெயரில் அல்லது உங்களுடைய மனைவியின் பெயரில் அல்லது உங்களுடைய இருவரின் பெயரில் சொந்தமாக இருக்க வேண்டும். மருத்துவ சிகிச்சைக்காக உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு குறிப்பிட்ட வயது வரம்பு எதுவும் கிடையாது. அதே நேரத்தில் நீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச தொகை உங்களுடைய 6 மாத காலம் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி அல்லது உங்களுடைய மொத்த pf ஆகியவற்றில் மிக குறைவானதாக இருக்க வேண்டும்.