
உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில் நடைபெற்ற ஒரு பிள்ளையைக் அடிக்கும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமோல் குப்தா என்ற 8 வயது சிறுவன், வினித் கன்னோஜியா (20) மற்றும் சுமித் கன்னோஜியா (18) ஆகிய இரு இளைஞர்களால் அமஹார் பட்டி உத்தர் கிராமத்தில் உள்ள தெருவில் ஏப்ரல் 14ஆம் தேதி கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
சிசிடிவி காட்சிகளில், இளைஞர்களில் ஒருவர் சிறுவனை தோளில் தூக்கி கொண்டு சென்று நேராக தரையில் வலுவாக வீசியபடி காணப்படுகிறார். இந்த தாக்குதலால் அமோலுக்கு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது. சிறுவன் சம்பவ இடத்திலேயே இரத்தமாக வாந்தி எடுத்ததும், உணர்விழந்ததும் உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு, குற்றவாளிகள் இருவரும் தங்களது தாத்தா மற்றும் பாட்டியிடம் இது குறித்து கூறியுள்ளனர். அதற்கு அவர்கள், “மீண்டும் அடிச்சு தந்துரு, போலீஸ் என்ன செய்யப் போறா?” என தாக்குதலை மேலும் தூண்டியதாகவும், இந்த தகவலும் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. சம்பவம் தொடர்பாக ரஸ்ரா காவல் நிலையம் விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.