
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாக்பத்த்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் ஒரே வாலிபரை காதலித்தனர். இந்த சிறுமிகள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரே வாலிபரை விரும்புவதை அறிந்த இரண்டு சிறுமிகளும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பரபரப்பான சாலையில் ஒருவரை ஒருவர் முடியை பிடித்து இழுத்து தாக்கி கொள்கின்றனர்.
அவர்களை பொதுமக்கள் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனாலும் அந்த சிறுமிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.