
மத்திய பிரதேசம் மாநிலத்தில் ராதா கிருஷ்ணா பிரஜாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 19 வயதில் சஞ்சனா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த நரேந்திர ஜதே என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் எதிர்ப்பை மீறி இருவரும் காதலித்தனர். இந்நிலையில் நேற்று பிரஜாபதி தன் மகளிடம் வாலிபருடன் ஆன காதலை கைவிடுமாறு கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு அவருடைய மகள் மறுத்த நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மகள் என்றும் பாராமல் ஆத்திரத்தில் பிரஜாபதி கழுத்தை நெரித்து கொடூரமாக அவரை கொலை செய்தார். இதுகுறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இளம் பெண் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரஜாபதியை கைது செய்துள்ளனர். மேலும் காதல் விவகாரத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.