உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்பூர் மாவட்டத்தில் ஒரு கிராமம் அமைந்துள்ளது. அந்த பகுதிக்கு அவனிஷ் குமார் (31) என்ற வாலிபர் சென்றுள்ளார். அப்போது அவரை குழந்தை திருடன் என நினைத்து கிராம மக்கள் அனைவரும் துரத்தியுள்ளனர். இதனால் பயந்து போன வாலிபர் ஒரு பாலத்தின் மீது ஏறி நீண்ட நேரமாக அங்கும் இங்குமாக ஓடிப் போக்கு காட்டினார். அந்த வாலிபர் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக பாலத்தில் இருந்த நிலையில் அவரை மீட்பதற்காக காவல்துறையினர் அங்கு சென்றனர்.

இந்நிலையில் சிக்கினால் கிராம மக்களிடம் அடி வாங்குவோமோ என்ற பயத்தில் திடீரென வாலிபர் 100 அடி உயரத்திலிருந்து கீழே குதித்து விட்டார். இதில் பலத்த காயமடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.