மேகதாது அணை விவகாரத்தில் அமைச்சர்கள் துரைமுருகன் லஞ்சம் வாங்கிவிட்டார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இது குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், அண்ணாமலை கொஞ்சம் விவரம் தெரிந்தவர் என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த அளவுக்கு கூட அவரிடம் அரசியல் அறிவில்லை என இப்போதுதான் தெரிகிறது. விவரம் தெரியாதவர்களிடம் என்ன பேசுவது என்று கூறியுள்ளார்.