
சேலம் மாவட்டத்தில் உள்ள காமராஜ் காலனியில் பூங்கொடி (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் செவிலியர் படிப்பை முடித்துள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பூங்கொடியிடம் அரசு பள்ளியில் ஆய்வக பிரிவில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 15 லட்சத்தை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் தமிழரசன் என்பவரிடம் கொடுத்துள்ளார்.
அவரும் தான் உறுதியாக வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. அதோடு அந்த பெண்ணுக்கு பணத்தையும் திரும்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
பூங்கொடி பணத்தை கேட்டால் ஆபாசமாக பேசுவதோடு, மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து பூங்கொடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பணத்தை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்தார்.
அதோடு இதுதொடர்பாக அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர். மேலும் கண்காணிப்பாளர் தமிழரசனை பணியிடம் நீக்கம் செய்து கல்வித்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.