பெரும் பரபரப்பை ரூ.30,000 கோடி தொடர்பாக தான் பேசியதாக வெளியான ஆடியோ ஜோடிக்கப்பட்டது எனவும், ஆடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடுத்து அவர்களுக்கு தேவையில்லாத விளம்பரத்தை தேடித்தர விரும்பவில்லை. வெளியான ஆடியோ ஜோடிக்கப்பட்டது. என் நேரத்தை வீணடிக்காமல் எனது பணியை தொடர விரும்புகிறேன் என்றார் PTR.

இந்நிலையில் ரூ.30,000 கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சரே வாக்குமூலம் கொடுத்துள்ளார் என இபிஎஸ் தெரிவித்தார். PTR பேசியதாக பரவும் ஆடியோ குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “இணையத்தில் ஆடியோ பரவிய போது சந்தேகம் வரவில்லை. இதுதொடர்பாக PTR அறிக்கை வெளியிட்ட பின்பு தான் முழு சந்தேகம் வருகிறது. இது அவருடைய குரல்தான் என்பது உறுதி. இந்த ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம்” என கூறினார்.