திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் சாலை வித்தியாலயம் பகுதியில் விவசாயிகள் பேரணி நடைபெற்ற போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் வித்யாலயம் நோக்கி சென்ற ஒரு பெண் திடீரென போலீசாரின் வாகனத்தின் முன்பாக நின்றார். அவர் அங்கு நின்று கொண்டிருந்த போலீசாரை பார்த்தார். பின்னர் தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி விட்டு திடீரென போலீசாரின் காலில் விழுந்து வணங்கினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த பெண்ணை எழுப்புவதற்கு முயன்றனர். அதற்குள் அவர் தானாகவே எழுந்து நின்று காவலர்களின் பணி போற்றத்தக்கது என கூறிவிட்டு தான் வந்த திசையிலேயே சென்றுள்ளார். இதனை யாரோ ஒருவர் செல்போனில் பதிவு செய்து சோசியல் மீடியாவில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானது.