
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கௌதமபேட்டையில் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரான கௌரவன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சுரேஷ்(32) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுரேஷிற்கு காலத்தியூர் பகுதியை சேர்ந்த சங்கீதா(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. சங்கீதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சங்கீதா அடிக்கடி சுரேஷை தொந்தரவு செய்து நகை மற்றும் பணத்தை லட்சக்கணக்கில் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் சுரேஷ் பணம் கொடுக்க மறுத்ததால் கோபமடைந்த சங்கீதா ஒன்று பணம் கொடு அல்லது செத்து விடு என கூறியுள்ளார். சங்கீதா சொன்ன வார்த்தைகளால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ் கடந்த 5-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக என்னுடைய மரணத்திற்கு சங்கீதா தான் காரணம். அவரை விட்டு விடாதீர்கள் எனக் கூறி சுரேஷ் வீடியோ பதிவு செய்துள்ளார். இதுகுறித்து சுரேஷின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட சுரேஷின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.