
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆல் ரவுண்டர் அஸ்வின் ஓய்வு பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியின் போது பாதியில் ஓய்வை அறிவித்து இந்தியா திரும்பினார். அவர் ஓய்வை அறிவித்த நிலையில் இது தொடர்பான விவாத பொருள்கள் இன்னும் தீரவில்லை. அதாவது பல வருடங்களாக டெஸ்ட் தொடர்களில் மட்டுமே அஸ்வின் விளையாட அழைக்கப்படுவதாகவும் தோனி கேப்டன்சியில் அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடிய அஸ்வினுக்கு கோலி மற்றும் ரோகித் சர்மா கேப்டன்சியில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
அதே சமயத்தில் கம்பீரும் அஸ்வின் ஓய்வு பெற ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக முன்னாள் வீரர்கள் கூட கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி அஸ்வின் ஒரு சிறந்த ஆட்டநாயகன் என்றும் அவர் ஓய்வு முடிவை அறிவிக்க ரோஹித் சர்மா மற்றும் கம்பீராகியோர்தான் காரணம் என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, அஸ்வின் செய்தியாளர்களை சந்தித்தபோது நான் பார்த்தேன். அப்போது அவர் ஓய்வு பற்றி அதிகமாக பேசவில்லை. ஒருவேளை விராட் கோலி மட்டும் கேப்டனாக இருந்திருந்தால் கண்டிப்பாக அஸ்வினை இப்படி பாதியில் ஓய்வு பெற விட்டிருக்க மாட்டார்.
நியூசிலாந்து தொடரில் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்ட போதே அஸ்வின் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அப்படி எனில் 5 தொடர்கள் கொண்ட இந்தப் போட்டி முடிவடைந்த பிறகு ஓய்வை அறிவித்திருக்க வேண்டும். ஆனால் கம்பீர் மற்றும் ரோகித் மோசமான முடிவுதான் அஸ்வினை ஓய்வு பெற அறிவிக்க அனுமதித்தது. இந்த போட்டி முடிந்த பிறகாவது ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் அஸ்வினுடன் பேசி இருக்க வேண்டும். மேலும் அடுத்த இரண்டு போட்டிகளில் அஸ்வின் இந்தியாவுக்கு தேவை என்று கூறியிருக்க வேண்டும் என்றார்.