முன்னதாக IPL சீசனுக்கு மெகா ஏலம் கடந்த வருடம் நடந்தது. இதில் இந்திய முன்னாள் வீரர்  ரவிச்சந்திரன் அஸ்வினை 9.75 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.இவர் கடந்த காலங்களில் தோனி தலைமையில் தான் விளையாடியது. தற்போது மீண்டும் சென்னையில் விளையாட இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியிருந்தார். கடந்த 2011 ஆம் வருடம் இவர் சென்னை அணி கோப்பை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தவர். இந்த நிலையில் 2011 நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெயிலை அவுட் ஆக்கிய அஸ்வின் சென்னையை வெற்றி பெற வைத்ததை இந்திய முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,  கிறிஸ் கெயில் யார் பந்து வைத்து வேண்டுமானாலும் சிக்சர், பவுண்டரி அடிப்பார். ஆனால் அவரை அவுட் ஆக்க அஸ்வினுக்கு நான்கு பந்து தேவைப்பட்டது. அதனால் அஸ்வின் பந்தை கையில் எடுத்ததும்  கால்கள் நடுங்க ஆரம்பித்தது. அவரை ஒரு சிறந்த டி20 பந்து வீச்சாளராக அடையாளம் காட்டியவர் தோனி தான். அஸ்வின் டி20 யிலிருந்து ஒரு நாள் போட்டி, டெஸ்ட் என பரிணாம அடைந்துள்ளார். அவர் ஒரு நல்ல பந்துவீச்சாளர் மட்டுமல்ல சிறந்த பேட்ஸ்மேனும் கூட என்று கூறியுள்ளார்.