புதுச்சேரியை சேர்ந்த ஆனந்த்(39) என்பவர் பாலக்காடு மாவட்ட எஸ் பி அலுவலகத்தில் கைரேகை நிபுணராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி ஆனந்த் மதுரை ரோடு அருகே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் மீது ஸ்கூட்டர் மோதியது இதனால் கீழே விழுந்து ஆனந்த் மயக்கமடைந்தார். இதனை பார்த்த ஹோட்டல் தொழிலாளியான சுரேஷ்(62) என்பவர் ஆனந்தை மீட்டு ஹோட்டல் பார்க்கிங் ஏரியாவில் தங்க வைத்தார், சிறிது நேரம் கழித்து ஆனந்திற்கு மயக்கம் தெளிந்தது. அப்போது சுரேஷ் காயமடைந்தவருக்கு சிகிச்சை அளிக்க பணம் வேண்டும் என கேட்டுள்ளார்.

இதனால் ஆனந்த் 2000 ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இதனையடுத்து மீண்டும் ஆனந்தின் வீட்டிற்கு சென்று சுரேஷ் காயமடைந்தவருக்கு சிகிச்சை அளிக்க பணம் வேண்டும் என கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஆனந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது ஆனந்த் விபத்தில் சிக்கும் நபர்களை நோட்டமிட்டு அவர்களிடமிருந்து பணம், செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறித்தது தெரியவந்தது அவருக்கு நஜிமுதீன் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் சுரேஷ் ,நஜ்முதீன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.