
முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி நடைபெறும் என்று தேசிய மருத்துவ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மூன்று முறை முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த தேர்வு காலை மாலை என இரு வேலைகளில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.natboard.edu.in என்ற இணையதளத்தை அணுகவும்.