
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டையில் 27 வயதுடைய இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் மொபைல் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் பேபி லட்சுமி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். பேபி லட்சுமியின் சகோதரர் ஞானதுரை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவர் அடிக்கடி தனது சகோதரி பேபி லட்சுமியின் வீட்டிற்கு சென்று வந்த போது இளம் பெண்ணிடம் பேசி தொந்தரவு அளித்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஞானதுரை இளம்பெண்ணை கடத்தி சென்று நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்து ஆசிட் வீசி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண் ஆறு மாதங்களுக்குப் பின்பு உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஞானதுரையை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திருநெல்வேலி மகிளா நீதிமன்றம் ஞானதுரைக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் 3000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.