
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அல்லது பணியில் இருக்கும் போது இறந்த ஆசிரியர்களுடைய குழந்தைகள் மற்றும் தொழில் கல்வி ஆசிரியர்களுடைய குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கு அரசு கல்வி கட்டணம் வழங்கி வருகிறது. இந்த குழந்தைகளுக்கு உயர்கல்வி கட்டண தொகை அல்லது 50,000 வழங்க அரசு உத்தரவிட்டது.
தேசிய ஆசிரியர் நல நிதியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையிலிருந்து பெறப்படும் வட்டி மூலமாக இந்த கட்டணம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. அது மட்டும் இன்றி தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து தொழில்நுட்ப கல்வி, பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு பயலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு புதிய அறிவிப்பு வந்துள்ளது. அதில் 2023-24 ஆம் கல்வியாண்டிற்கு படிப்பு உதவி தொகை வழங்க விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனை ஜனவரி 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.