நடப்பு கல்வியாண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க மே 17 இன்று கடைசி நாள் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இடைநிலை, பட்டதாரி, தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முறைமை இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதுவரை தொடக்கக்கல்வி மற்றும் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் சுமார் 13,000 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளது.