
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது மிகவும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்துகிறார்கள். அதன் பிறகு சமூக வலைதளத்தில் நாள்தோறும் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகிறது. இந்த வீடியோக்கள் அதிர்ச்சியூட்டுவதாகவும் ஆச்சரியப்பட வைப்பதாகவும் சில சமயங்களில் வேடிக்கையானதாகவும் இருக்கிறது. அந்த வகையில் தற்போது எக்ஸ் பக்கத்தில் பகிரப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் சாமியார் ஒருவர் சாலையில் நடந்து வருகிறார்.
அப்போது ஒரு வாகனத்தின் அருகே வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அந்த வாலிபருக்கு சாமியார் ஆசீர்வாதம் செய்வதற்காக தலையில் கை வைத்தார். உடனே அந்த வாலிபர் சாமி வந்தது போல ஆட ஆரம்பித்துவிட்டார். இதைப் பார்த்த சாமியார் அரண்டு விட்டார். இந்த வீடியோவை SHHAN SUNDAR என்ற பயனர் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் பாவம் அவரே பயந்துட்டாரு.? இனிமே எவனுக்காவது ஆசீர்வாதம் பண்ணுவ.? தமிழ்நாட்டு பசங்கன்னா சும்மாவா என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவுக்கு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பாவம்
அவரே பயந்துட்டாரு …..இனிமே
எவனுக்காவது ஆசீர்வாதம் பண்ணுவ ?தமிழ்நாட்டு பசங்கன்னா
சும்மாவா…..🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 pic.twitter.com/aCbGhXTym0
— SHAAN SUNDAR🖤♥️🖤♥️ (@Sun46982817Shan) September 2, 2024