அரியானா மாநிலத்தில் தேஜ்வீர் (27)-மீனா (24) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். அதாவது தேஜ்வீர் மற்றும் மீனா இருவரும் காதலித்து வந்த நிலையில் காதலை மீனாவின் குடும்பத்தினர் ஏற்க மறுத்துள்ளனர்‌. இருப்பினும் எதிர்ப்பை மீறி கடந்த 22ஆம் தேதி காசியாபாத்தில் உள்ள ஒரு பிரபல கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரையும் மீனாவின் இளைய சகோதரரான சச்சின் (21) என்பவர் ஒரு பூங்காவுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

அவரை நம்பி  இருவரும் அங்கு சென்றனர். அப்போது சச்சினுடன் உறவினரான ராகுல் என்பவரும் அங்கு சென்றுள்ளார். இவர்கள் இருவரும் அந்த தம்பதியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக தேஜ்வீரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து சச்சின் மற்றும் ராகுல் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் காதல் திருமணம் செய்த தம்பதி ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.