
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள தாபஸ் பேட்டை என்னும் பகுதியில் சிவானந்தம் -காவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்பத்தில் நடந்த சண்டை காரணமாக கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வரப்போகும் வர மகாலட்சுமி பண்டிகைக்காக புது டிரஸ் வாங்கி தரும்படி தனது கணவரிடம் காவ்யா கூறியுள்ளார்.
அதற்கு சிவானந்தம் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் பெரிய பிரச்சனையாக உருவாகியது. இதில் சிவானந்தம் காவ்யாவை சரமாரியாக தாக்கினார். அதில் கீழே விழுந்த காவ்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அதன்பின் சிவானந்தம் வீட்டிலிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த தகவல் அப்பகுதியில் உள்ள காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அந்தத் தகவலின் படி விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிவானந்தத்தை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.