
மகாராஷ்டிரா மாநிலத்தில் 43 வயது மதிக்கத்தக்க பிரோஸ் நியாஸ் ஷேக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல மாநிலங்களில் உள்ள கணவரை இழந்த பெண்கள் மற்றும் விவாகரத்தான பெண்களை குறி வைத்து ஏமாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து 20க்கும் மேற்பட்ட பெண்களை இவர் ஏமாற்றியுள்ளார். இதனை அடுத்து அந்தப் பெண்களிடம் திருமணம் முடிந்த சில நாட்களுக்குள் பணம், விலை உயர்ந்த பொருள்கள், செல்போன், லேப்டாப் போன்ற பொருள்களை திருடிகொண்டு அந்தப் பெண்களை ஏமாற்றி விட்டு சென்றுள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் அவர் ஒரு பெண்ணை மேட்ரிமோனியில் பேசி பழகி திருமணம் செய்துள்ளார். அதன் பின் அந்த பெண்ணிடம் இருந்து 6.5 லட்சம் ரொக்கம், மடிக்கணினி ,நகைகள் போன்றவற்றை திருடிவிட்டு தப்பி சென்று விட்டார். இதனால் ஏமாந்து போன அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் பிரோஸ் நியாஸ் ஷேக்கை கைது செய்தனர். மேலும் விசாரணையில் அவரிடமிருந்து பல பெண்களிடம் திருடப்பட்ட மொபைல் போன்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், மடிக்கணினி, நகைகள் போன்ற பொருட்களை காவல்துறையினர் மீட்டனர்.