கரூர் மாவட்டத்தில் உள்ள விஜயமங்கலம் பகுதியில் விக்னேஷ் (27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூலனூர் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் விக்னேஷ் சிறுமியை சீரழிக்கும் நோக்கத்தோடு அவரிடம் ஆபாச வீடியோக்களை அனுப்புமாறு கூறியுள்ளார். அதோடு அந்த வீடியோவை உடனடியாக டெலிட் செய்து விடுவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய சிறுமி தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் அனுப்பியுள்ளார்.

அதை அவர் ஸ்கிரீன் ரெக்கார்டு செய்து வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறிது நாட்கள் கழித்து தான் அழைக்கும் இடத்திற்கு வரவேண்டும் எனவும் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் வாலிபர் சிறுமியை மிரட்டியுள்ளார். அதோடு தான் கூறியதை கேட்காவிட்டால் ஆபாச வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி தன் பெற்றோரிடம் நடந்த விஷயங்களை கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர். மேலும் அர்  பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.