
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜகவினர் கேரளாவில் பில்லி சூனிய பூஜை நடத்தி இருப்பதாக அம்மாநிலத்தின் துணை முதல்வர் டிகே சிவகுமார் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். இந்த விஷயம் குறித்து அவர் அளித்த பேட்டியில், “முதல்வர் சித்தராமையா, மற்றும் பாஜகவினர் 5 பன்றிகள், 21 வெள்ளாடுகள், 21 செம்மறி ஆடுகள், 5 எருமை மாடுகளைப் பலியிட்டு சத்ரு பைரவி யாகம் நடத்தி உள்ளனர். இந்த யாகம் கேரளாவில் நடத்தப்பட்டிருக்கிறது” என்று பரபரப்பை கிளப்பியுள்ளார்.