கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடப்பா. இவரது மனைவி பாப்பம்மா. இவர் ஆடு மேய்த்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். நேற்று முன்தினம் ஆடு மேய்க்க சென்ற பாப்பம்மா வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை தேடிப் பார்த்தனர். முதல் நாள் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மறுநாள் தேடி சென்ற போது வனப்பகுதியில் அரை நிர்வாண கோலத்தில் பாப்பம்மா உயிரிழந்த கடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அவரது காது மற்றும் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகள் காணாமல் போனது. இதுகுறித்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாப்பம்மாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.