
இந்தியாவில் உள்ள டாப் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவருடைய இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மிர்ச்சண்ட்க்கும் இன்னும் சில நாட்களில் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சொகுசு கப்பலில் நடந்த இரண்டாவது பிரீ வெட்டிங் நிகழ்ச்சியின் போது ராதிகா மிர்ச்செண்ட் அணிந்திருந்த ஆடை குறித்து தகவல் தற்போது வைரலாக பரவி வருகிறது.
அதன்படி ஆனந்த் அம்பானி ராதிகாவின் 22 ஆவது பிறந்தநாள் அன்று தன்னுடைய காதலைக் கொட்டி ஒரு காதல் கடிதம் எழுதி அனுப்பி இருக்கிறார். இந்த கடிதத்தை ராதிகா தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்ல ஆசைப்பட்டு ஆடையாக வடிவமைக்க முடிவு செய்தார். கடிதத்தில் வரும் வார்த்தைகளை அப்படியே அச்சிட்டு லண்டன் நகரை தலைமையாக கொண்டு செயல்பட்டு வரும் மிகப்பெரிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் கொடுத்து இருக்கிறார். கடிதத்தில் உருவான ஆடையை தான் இரண்டாவது பிரீ வெட்டிங்க் நிகழ்ச்சிக்கு அணிந்து வந்திருக்கிறார். அதன்போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.