உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர் டெஸ்லா நிறுவனத்தின் சி இ ஓ எலான் மஸ்க். இவர் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் கூட. இவர் அமெரிக்கா நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தன்னுடைய ஆதரவை டொனால்ட் ட்ரம்புக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ எலான் மஸ்க் மீது தற்போது ஒரு பரபரப்பு குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார். அதாவது வெனிசுலா நாட்டில் ஆட்சியை கவிழ்க்க மஸ்க் சதி செய்வதாக அவர் கூறியுள்ளார்.

அதோடு இதற்காக மஸ்க் ரூ.8,400 கோடி வரை செலவு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் 3-வது முறை அதிபராக வென்றார். ஆனால் அவர் தேர்தலில் வெற்றி பெற மோசடி செய்ததாக மஸ்க் விமர்சித்திருந்தார். மேலும் அதிலிருந்தே இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் என்பது நீடிக்கும் நிலையில் தற்போது மஸ்க் மீது வெனிசுலா அதிபர் இப்படி ஒரு குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார்.