ஏழு கிடங்காக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகின்றது.  வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகி வருகிறது. மக்களவைத் தேர்தலில் பாஜக- காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக அமோக வெற்றி பெறும் என கூறப்பட்ட நிலையில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அறுதி பெரும்பான்மையை பெறுவதில் கடும் இழுபறி ஏற்படக்கூடும் என்பதால் பங்குச்சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.