டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் விராட் கோலி அதிரடியாக விளையாடி 76 ரன்கள் குவித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியின் இறுதி ஓவரில் தென்னாப்பிரிக்கா அணி 16 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த ஓவரின் முதல் பந்து வீசப்பட்டாலும் அதனை மில்லர் சிக்ஸராக தூக்கி அடித்தார். இதை அனைவரும் சிக்சர் என்று அடித்த நிலையில் அந்தப் பந்தை சூரியகுமார் யாதவ் ஓடி வந்து கேட்ச் பிடித்துவிட்டார். அவர் எனினும் முதலில் பவுண்டரி எல்லையை கடந்து செல்ல முற்பட்டபோது அதனை மேலே தூக்கி வீசிவிட்டு மீண்டும் பவுண்டரிக்கு உள்ளே வந்து அசத்தலான கேட்ச் பிடித்தார். இது ஆட்டத்தின் போக்கை மாற்றி இறுதியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற மிகவும் உதவியாக இருந்தது. மேலும் 17 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் 2-வது முறையாக உலக கோப்பையை வெல்வதற்கு சூரியகுமார் பிடித்த கேட்ச் மிகவும் உதவியாக இருந்த நிலையில் அது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.