
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாள பிரதீப் ஜான் தெரிவித்துள்ளனர்.
பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் அதிக அளவில் மழை பெய்துள்ளதாகவும் புயல் மெதுவாக நகர்ந்ததே இதற்கு காரணம். அதாவது கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 50 சென்டிமீட்டர் மழை என்பதெல்லாம் 300 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு என்று கூறியுள்ளார். மேலும் விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 50 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.
மேலும் முன்னதாக தென்மேற்கு வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கிய நிலையில் புயல் கரையை கடந்த பின்னரும் அது பல மணி நேரமாக புதுச்சேரியில் மையம் கொண்டதால் அங்கும் கனமழை கொட்டி தீர்த்தது.
இந்தப் புயல் கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் விழுப்புரம், கிருஷ்ணகிரி, கடலூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் ராணிப்பேட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அங்கு சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.