வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்குகிறது. சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரியில் தண்ணீர் நிரம்பி வரும் நிலையில் ஏற்கனவே கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பல்வேறு சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளதால் மக்கள் தண்ணீரில் தத்தளிக்கிறார்கள்.

மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கனமழையின் போது வீட்டிற்குள் தண்ணீர் வந்தால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் வர வாய்ப்பு அதிகம். இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில்  மழை பெய்யும் போது பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் வீட்டுக்குள் நுழைந்து விட்டால் உடனடியாக உதவிக்கு தொடர்பு கொள்ள தமிழக அரசு போன் நம்பர் வெளியிட்டுள்ளது. அதன்படி பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் புகுந்து விட்டால் 044 2220 0335 என்ற தொலைபேசி நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் இதேபோன்று பெண்களுக்கு உதவி தேவைப்பட்டால் 181 என்ற நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.