கர்நாடக மாநிலம் ராய்ச்சூர், சிவ்வார் தாலுகா கல்லூர் கிராமத்தில் ஆட்டு இறைச்சியை சாப்பிட்ட தம்பதியும் அவர்களுடைய ஒரு மகன் மற்றும் மகளும் உணவு விஷமானதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடைய மற்றொரு மகன் ஆபத்தான நிலையில் உள்ள நிலையில் புதன்கிழமை காலை உணவு சாப்பிட்ட அவர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பீமன்னா (60), அவரது மனைவி இரம்மா (54), மகன் மல்லேஷ் (19), மகள் பார்வதி (17) ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 2) உயிரிழந்துள்ளனர்.