
பள்ளிகளின் அனுமதி இன்றியும் போக்குவரத்து துறை அனுமதி இன்றியும் ஷேர் ஆட்டோக்களில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் நிலை தற்போது உள்ளது. அதே சமயம் அந்த ஆட்டோக்கள் விபத்துகளில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. ஆட்டோக்களில் அதிக அளவிலான மாணவர்களை ஏற்றி செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகின்றது.
இந்த நிலையில் ஆட்டோகளில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல தடை விதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.