அமெரிக்காவில் எய்லா ஆடம்ஸ் என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவர் ஆணும் பெண்ணும் சமம் என்ற வகையில் போராட்டங்களை நடத்தி வருகிறார். குறிப்பாக ஆண்கள் போன்று பெண்களும் மேலாடை இன்றி செல்லலாம் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறார். இதற்காக அவர் பல்வேறு இடங்களுக்கு மேலாடை இல்லாமல் செல்வதோடு அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இது தொடர்பாக அந்த இளம் பெண் கூறும்போது, நான் ஆண்களைப் போன்று பெண்களும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். நியூயார்க் நகரில் கடந்த 30 வருடங்களாக பெண்கள் மேலாடை இன்றி செல்வது சட்டபூர்வமாக இருக்கிறது. மேலும் நான் செய்வது பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள். பொதுவெளியில் ஆண்களைப் போன்று பெண்களும் மேலாடை இல்லாமல் தயக்கம் இன்றி செல்ல முடியும். இதற்கு எதிரான கருத்து உடையவர்களை நான் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்.