கணவன் மதச்சடங்குகளின்படி திருமணம் செய்ய வாக்குறுதி அளித்தும் அதை நிறைவேற்றவில்லை என்பதற்காக அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு தொடர முடியாது என பாம்பே உயர்நீதிமன்றத்தின் கோவா கிளை தெரிவித்துள்ளார்.

திருமணம் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டு, இருவரும் உடலுறவில் ஈடுபட்ட பின்னணியில், இது ஒப்புதலுடன் ஏற்பட்ட உறவாகவே கருதப்பட வேண்டும் என நீதிபதிகள் பாரதி டாங்க்ரே மற்றும் நிவேதிதா மேஹ்தா கூறினர்.

இந்த வழக்கில், மனைவி தனது கணவர் மதச்சடங்குகளின் அடிப்படையில் திருமணம் செய்ய வாக்குறுதி அளித்ததால் தான் உடலுறவை ஒப்புக்கொண்டதாக கூறி, பின்னர் அவர் வாக்குறுதியை மீறியதால் பாலியல் பலாத்காரம் நடந்ததாக புகார் அளித்திருந்தார்.

ஆனால், இருவரும் திருமணத்தை பதிவு செய்திருந்ததும், மனைவிக்கு அதுபற்றி முன்னதாகவே தெரிந்திருந்ததும், அவர் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது ஏமாற்று வாக்குறுதியால் ஏற்பட்ட உறவாக அல்ல என்றும், வழக்கை தொடரும் அடிப்படை இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

நீதிபதிகள் மேலும் கூறுகையில், இந்த நிலையில் அதிகபட்சமாக கூறப்படக்கூடியது கணவர் வாக்குறுதியை மீறியதாகும், ஆனால் அது பாலியல் பலாத்காரம் அல்லது மோசடி எனப் பார்க்க முடியாது.

FIR-ல் குறிப்பிடப்பட்ட விவரங்கள் கொண்டே கணவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் நிலைநிறுத்த முடியாது என தீர்மானித்து, அதனை ரத்து செய்தனர்.