அரியானா மாநிலத்தில் மீனா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காஜல் (27) என்ற மகளும் ராகுல் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் காஜல் சுதந்திரமாக வாழ விரும்பிய நிலையில் ஆண்கள் அணியும் ஜீன்ஸ், டி-ஷர்ட் போன்ற உடைகளை அணிந்து வந்துள்ளார். அதோடு இன்ஸ்டாகிராமில் ஆண்கள் உடையணிந்து தொடர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார். இது மீனா மற்றும் ராகுலுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் காஜலை கண்டித்ததோடு தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிவந்தனர். இதனால் காஜல் தன்னுடைய மாமன் மகனான க்ரிஷ் (18) என்பவரை துணைக்கு அழைத்துள்ளார். அதோடு தன் பாட்டியின் பெயரில் இருக்கும் வீட்டை உன் பெயருக்கு மாற்றி தருவதாக காஜல் கிரிஷிடம் கூறியதோடு ரூ‌.50,000 பணம் தருவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் கிரிஷ் மீனா மற்றும் ராகுல் இருவரையும் கொடூரமாக கொலை செய்துள்ளார். தன்னை கொலை செய்ய வேண்டாம் என மீனா தன் மகளின் கால்களை பிடித்து கெஞ்சியுள்ளார். இருப்பினும் துடிக்க துடிக்க அவரைக் கொன்றார். இதேபோன்று ராகுலையும் அவர்கள் கொலை செய்தனர். இந்த சம்பவம் தெரியாமல் இருப்பதற்காக காஜல் திருட்டு நடந்தது போல் வீட்டில் செய்ததோடு அந்த சமயத்தில் தான் வெளியே இருந்தது போன்று காண்பித்துள்ளார். இருப்பினும் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் க்ரிஷ் மற்றும் காஜல் இருவரையும் பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். மேலும் இதைத் தொடர்ந்து கொலை சம்பவம் வெளியே தெரிய வரவே அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.