
பிக் பாஸ் விஜய் தொலைக்காட்சியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் ஏழாவது நிகழ்ச்சி ஆனது 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டது. தற்போது ஒரு மாதம் நடைபெறும் விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி மற்றும் ரெட் கார்ட்டு கொடுக்கப்பட்ட பிரதிப் என ஏழு பேர் வெளியேறியுள்ளார்கள். கடந்த மாதம் 29ஆம் தேதி மீண்டும் 5 பேர் வைல்ட் கார்டு என்ட்ரி மூலமாக உள்ளே வந்துள்ளார்கள்.
வீட்டின் தலைவராக இந்த வாரம் மாயா இருக்கும் நிலையில் சர்வாதிகார தலைவராக இருந்து வருவதோடு பிடிக்காத போட்டியாளர்களின் மீது கடுமையாக பழி போட்டு வருகிறார். சமீபத்தில் நிக்சன் மாஸ்க் கேட்டதற்கு மாயா தன்னுடைய உள்ளாடையை எடுத்துக் காட்டியது தற்போது சர்ச்சையாக இருக்கிறது. அர்ச்சனா மாயாவிடம் ஒரு ஆண் உள்ளாட எடுத்துக்காட்டிருந்தால் என்ன செய்வீர்கள் என்று பதிலடி கொடுத்து கேள்வி எழுப்பும் வருகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.