
மத்திய மாநில அரசுகள் ஏழை, எளிய மக்களை நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்ட துறையால் “சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம்” என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் கீழ் ஆதரவற்ற கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக தங்குமிடம், உணவு, உடை, மருத்துவ பராமரிப்பு போன்ற அடிப்படை வசதிகள் அரசால் செய்து கொடுக்கப்படுகிறது. மேலும் இதில் குழந்தைகளுக்கு தரமான கல்வியும் கொடுக்கப்படுகிறது.
அதன்படி இந்த திட்டத்தின் கீழ் பெற்றோர் இல்லாத குழந்தைகள், ஒற்றை பெற்றோர், மாற்றுத்திறனாளி பெற்றோர் ஆகியோரின் குழந்தைகளும் பயன் பெறலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு ஆதார், பிறந்த சான்று, வருமான சான்று போன்றவை தேவையான ஆவணங்கள். இந்த திட்டத்தில் விருப்பம் உள்ளவர்கள் அருகிலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதுமான ஆவணங்களோடு விண்ணப்பித்து பயனடையலாம்.