ஆதார் என்பது மிக முக்கியமான தனித்துவமான ஆவணம் .கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அரசு வழங்கும் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் மிகவும் அவசியம். இந்த ஆதாரை 10 வருடங்களுக்கு ஒரு முறை அப்டேட் செய்ய வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறி வருகிறது. இந்த நிலையில் ஆதாரை அப்டேட் செய்வது குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி  உள்ளது. அதாவது மக்கள் பெரும்பாலும் ஆதார்  அட்டையை வங்கி கணக்கு, ரேஷன் கார்டு ஆகியவற்றோடு இணைத்து இருப்பார்கள். இவ்வாறு இணைக்கப்பட்டுள்ள ஒரு நபரின் ஆதார் இயங்குகிறதா? அவர் பயன்படுத்துகிறாரா? என்பதை UDAI  அமைப்பு அறிந்து கொள்வதற்கு ஆதார் புதுப்பித்தல் அவசியம். இதனால் பலரும் புதுப்பித்து வருகிறார்கள்.

பெரும்பாலும் ஆதார் தொடர்பான எந்த ஒரு வேலையையும் செய்யும்போது ஓடிபி நம்பர் கேட்கக்கூடும். அந்த நேரத்தில் ஓடிபி கொடுக்காவிட்டால் செயல்முறை நிறுத்தப்படலாம். அதற்கு மொபைல் நம்பர் அவசியம். கையில் இருக்கும் செல்போன் நம்பருக்கு ஓடிபி நம்பர் வந்தால் மட்டுமே ஆதார் வேலைகளை முடிக்க முடியும். சில நேரங்களில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு ஓடிபி வராது. இதற்கு ஆதார் கார்டில் தற்போதைய மொபைல் எண்ணை  புதுப்பிப்பது அவசியம். இதை செய்ய அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டும்.  அங்கு சென்று ஆதார் மற்றும் புதிய மொபைல் எண்ணோடு ஆதார் அப்டேட் படிவத்தை நிரப்பி கொடுக்க வேண்டும். பின்பு ஸ்டேட்டஸ் சரிபார்க்க வேண்டும். செல்போன் எண்ணை புதுப்பிக்க https://appointments.uidai.gov.in/ என்ற இணையதளத்தில் 50 ரூபாய் கட்டணத்தில் முன்பதிவு செய்யலாம். உங்களுக்குURN எண் வழங்கப்படும். பின்பு சில நாட்களுக்குள் ஆதார் கார்டில் செல்போன் எண் புதுப்பிக்கப்படும். பின் ஆதாரை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.