இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் கார்டு இல்லை என்றால் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இன்னும் சொல்லப் போனால் பிறந்த குழந்தைக்கு கூட இன்று ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் ஒரு நபரின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் அப்டேட்டாக இருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனால் அடிக்கடி ஆதார் கார்டை அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும்.

இந்நிலையில் ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்க UIDAI அனுமதி அளித்துள்ளது. இந்தியர்களுக்கான தனித்துவ அடையாள அட்டையான ஆதாரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://myaadhar.uidai.gov.in/ என்பதில் அல்லது myaadhaarஎன்ற செயலியில் “மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்ணை சரிபார்க்கவும்” என்ற அம்சத்தின் கீழ் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.