ஆதார் என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மிக முக்கிய ஆவணமாகும். உங்களுடைய ஆதார் கார்டை வேறு யாராவது தவறாக பயன்படுத்தாமல் இருப்பதற்கு மாஸ்க் ஆதார் கார்டை பயன்படுத்த வேண்டும்.  வங்கிக்கணக்கு போன்ற மிக முக்கியமான விஷயங்களுக்கு ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது . அப்படிப்பட்ட ஆதார் கார்டை நாம் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.  இந்நிலையில் ஆதார் இருப்பதால் இந்திய குடிமகனாகி விட முடியாது என்று UIDAI தெரிவித்துள்ளது.

மேற்குவங்கத்தில் தங்கியுள்ள வெளிநாட்டினருக்கு அளிக்கப்பட்ட ஆதார் செயலிழப்பு செய்யப்பட்டது தொடர்பான வழக்கு, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது UIDAI சார்பில், இந்தியாவில் 182 நாள்களுக்கு தங்கும் வெளிநாட்டினருக்கு, அரசு மானியங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆதார் அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.