
ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் ஒரு தம்பதிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இதில் கணவன் தன் மனைவியின் ஆதார் கார்டில் உள்ள தவறை சரி செய்வதற்காக பக்கத்து வீட்டுக்காரரின் உதவியை நாடியுள்ளார். அதன்படி இவர்கள் அனைவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் ஆதார் கார்டை சரி செய்வதற்காக மார்க்கெட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது வரும் வழியில் அந்த பெண்ணின் கணவர் மது போதையில் இருந்தார். அவர் மது போதையில் சுயநினைவை இழந்த நிலையில் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பக்கத்து வீட்டுக்காரர் அவருடைய மனைவியை ஆளில்லா இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரியின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பக்கத்து வீட்டுக்காரரை தேடி வருகிறார்கள். மேலும் இந்த வழக்கில் விரைவில் குற்றவாளியை கைது செய்வோம் என்று ஜலேஸ்வர் பகுதியின் துணை பிரிவு காவல் அதிகாரி திலீப் குமார் சாஹூ கூறியுள்ளார்.